Skip to main content

Posts

Featured

புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு

அரங்கம் மைசூரில் இயங்கி வரும் மத்திய செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் சார்பில் நானும் திரு. அகிலன் அவர்களும் புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்குக்கு சென்றோம். அங்கு நடைப்பெற்ற நிகழ்ச்சிகள் பின்வருமாறு: புதுச்சேரி வலைப்பதிவர் பயிலரங்கு திசம்பர் 9(09.12.2007) ஞாயிறு காலை 09. 00 மணி முதல் இரவு 08.30 மணிவரை புதுச்சேரி சற்குரு உணவகத்தின் கருத்தரங்க அறையில் சிறப்பாக நடைபெற்றது. தமிழா திரு. முகுந்த் காலை 9-00 மணிக்குப் பங்கேற்பாளர்களின் பதிவு தொடங்கியது. 9-30 மணிக்கு நிகழ்ச்சி பற்றிய அறிமுகத்தைக் கோ.சுகுமாரன் அவர்கள் வழங்கினார் அவரைத்தொடர்ந்து தமிழா முகுந்த் அவர்கள் தமிழ் எழுத்துருக்களின் செயலிகளை எவ்வாறு நிறுவுவது எனச்செயல் விளக்கம் அளித்தார். இடையிடையே சென்னை நண்பர்களும் முகுந்துடன் இணைந்து கொண்டனர். இரா.சுகுமாரன் இளங்கோ செயலி நிறுவுவதை விளக்கினார். காலை 10.00 முதல் 10.30 வரை முனைவர் மு.இளங்கோவன் தமிழ் 99 தட்டச்சுப் பலகையின் வருகை, பயன்பாடு,நிறை,குறைகளைப் பகிர்ந்து கொண்டார். மா.சிவகுமார் இடையில் வந்து அவையின் இறுக்கத்தைக் குறைத்து இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தார்.பங்கேற்பாளர்கள் எழுப்பிய ஐய

Latest Posts

நீங்கள் கம்ப்யூட்டரில் வேலை பார்ப்பவரா...?

பனிக்காலத்தில் சருமத்தை பாதுகாக்க...

தேநீர் பருகுவீர்! உடல் எடையைக் குறைப்பீர்!